தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புதுமை இயக்கம் (அ) StartupTN, தமிழ்நாடு அரசு திட்டமானது தமிழ்நாட்டில் புத்தொழில் பசுமை அமைப்பில் வளர்ச்சியை ஊக்குவிக்க நிறுவப்பட்டுள்ளது. MSME துறையின் கீழ் செயல்படும் StartupTN ஒரு ஊக்கியாக செயல்படுகிறது, ஆர்வமுள்ள தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், வழிகாட்டிகள் மற்றும் பிற முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைத்து புதுமைக்கான செழிப்பான இயக்கத்தை வளர்க்கிறது.
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை 2018-23 ஆம் ஆண்டுகளின் பலத்துடன் StartupTN, தமிழ்நாட்டில் புத்தொழில்களைப் பதிவு செய்துள்ள நிறுவனங்களுக்கு ஒருங்கிணைந்த ஆதரவுகளை வழங்குதல். இத்திட்டத்தின் முக்கியப் பணியானது கீழ்காணும் சேவைகளை வழங்குதலாகும்:
- நிதி வழங்கல்: Tanseed நிதி, StartupTN திட்டங்களின் வழியாக நிதியுதவிகளை வழங்கி புத்தொழில்களை ஊக்குவித்தல்.
- வழிகாட்டுதல் கூட்டிணைப்பு: இதன் மூலம் புத்தொழில்களை இணைத்து அனுபவம் வாய்ந்த வழிகாட்டுநர்கள், தொழிற்துறை தலைவர்கள் வழியாக பயனுள்ள வழிகாட்டுதல்களை வழங்கி இணைப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
- கொள்கை ஆதரவு: StartupTN திட்டம், தொழில்களை எளிதாக நடத்தும் கொள்கைகளை ஊக்குவித்து புத்தொழில் வளர்ச்சிக்கு ஆற்றலை வழங்குதல்.
- கட்டுமானம் மற்றும் ஆதரவு: புத்தொழில்களை. தொழில்காக்கும் நிறுவனங்களுடன் இணைத்து, இணை பணியிடம் மற்றும் தொழில் வெற்றிக்கான தேவையான வசதிகளைத் தருதல்.
புதுமையை வளர்த்தல் மற்றும் தொழில்முனையும் பராமரிப்பதன் மூலம், இந்தியாவில் தமிழ்நாட்டை புத்தொழில்களின் மையமாக உருவாக்க StartupTN ஆர்வம் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இணையதளத்தைப் பாருங்கள்